ஆற்றில் கிடந்த மாங்காயை எடுத்து சாப்பிட்டதால் மரணத்தண்டனை



சங்க கால சமுதாயத்தில் அநீதியான முறையில் தண்டனைகள் வழங்கப்பட்ட நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. நன்னன் என்னும் மன்னனுடைய தோட்டத்தில் உள்ள மாமரத்திலிருந்து ஒரு மாங்காய்  அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் விழுந்துவிட்டது. ஆற்றில் நீராடுவதற்கு சென்ற பெண் ஒருத்தி கீழே கிடந்த மாங்காயை எடுத்து உண்டுவிடுகிறாள். அதனை குற்றமாக கருதிய மன்னன் அவளுக்கு மரணத்தண்டனை வழங்கினான். தனது மகள் செய்த குற்றத்திலிருந்து விடுவிப்பதற்காக அவளது எடைக்கு சமமான எடையில் பொன்னாலான பெண்சிலை செய்துக்கொடுப்பதற்கும்,81 யானைகளை கொடுப்பதற்கும் அவளது தந்தை முன் வந்தபோதும் நன்னன் அதனை ஏற்காது மரணத்தண்டனை வழங்கினான்.

Comments

Popular Posts