உலகின் முதல் மனிதன் தமிழன் -
இந்தியாவையே தலைச்சுற்றச் செய்த ஆய்வு
ஆதி மனிதன் பேசிய மொழி தமிழ்தான் என்று இதுவரை குத்துமதிப்பாகத்தான் பேசி வந்தோம். ஆனால் இப்போது இந்த ஆதாரம் அவை உண்மையென நிரூபிக்கிறது.
பழங்கால நம்பிக்கை மற்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் வரை நிறைய ஆய்வாளர்கள் கூறிவருவது மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடத்துக்கும் சென்றுள்ளான் என்பதுதான். அதற்கான ஆதாரம் என்பது அங்கு பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள், வேட்டைபொருள்கள்தான். ஆனால் அதைவிட அதிக நாட்களுக்கு முன்னரே தமிழகத்தில் இந்த கருவிகள் மிகவும் மேம்பட்ட முறையில்பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்தியாவே அதிர்ச்சியடையச் செய்யும் தகவல்தானே.இது சென்னைக்கு அருகிலுள்ள அதிராம்பாக்கத்தில் கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு பிரம்மாண்டமான வரலாற்று ஆய்வுக்குரிய பகுதியாகும்.
சென்னையிலிருந்து இரண்டு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இது 68கிமீ தூரம் கொண்டது. இங்கு வரலாற்று ஆய்வுகள் நடந்துவருகின்றன.இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடம். இங்கு செல்வதற்கு ஆவடி வழியாகவும், திருவள்ளூர் வழியாகவும் இரண்டு வித வழித்தடங்கள் உள்ளன.
மனிதன் முதலில் எங்கு தோன்றினான் என்பது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய கேள்விதான். நான்கு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியதாக ஒரு ஆதாரம் இருந்தது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஆப்ரிக்காவிலிருந்து இருந்து மனிதன் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
நாம் முன்னர் படித்த வரலாற்றுப்பகுதிகளில் கற்கால தமிழர்கள் என்னவெல்லாம் செய்தார்கள், அவர்களின் பாரம்பரியம் எப்படி என்பது குறித்த நிறைய தகவல்களை படித்தோம். ஆனால் இதையெல்லாம் அரசு பெரிதாக எடுக்கவில்லை. அப்போவே கற்கருவிகள், சாயஆலைகள், உலோகங்களை உருக்கும் ஆலை என நிறைய முன்னேறி இருந்ததை படித்திருக்கிறோம். அதற்கும் மேலாக கிட்டத்தட்ட 3.85 லட்சம் வருடங்களுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்ட ஆயுத கற்கள் தமிழகத்தின் தலைநகருக்கு அருகேயே கிடைத்திருப்பது, இங்கேயே மனிதன் தோன்றியுள்ளான் என்பதையே காட்டுகிறது.
Comments
Post a Comment